அரசு போக்குவரத்துக் கழகநிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்குட்பட்ட அரசு பஸ் டிரைவர் பெருமாள், நேற்று முன்தினம் செங்கல்பட்டு அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ., மண்டல பொறுப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுவாமிநாதன், சுப்ரமணியன், செந்தில்குமார் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!