ஆர்.கே.எஸ்., கல்லூரியில் பயிற்சி பட்டறை கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன் மேம்பாடு குறித்த பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான் விக்டர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உதவி பேராசிரியர் கலைவாணி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.புதுச்சேரி முன்னோடி வெப் மற்றும் மொபைல் ஆப் டெவலப்பர் நாகேஸ்வரன் மொபைல் செயலியின் பரிணாமம், எவ்வாறு உருவாக்குதல் மற்றும் வருங்காலத்தில் எப்படி முன்னெடுப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கயல்விழி, ஷாஜகான் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் அசோக் நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!