நடுவீரப்பட்டு கோவிலில்தீமிதி திருவிழா
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விநாயகர், அர்சுணன், திரவுபதியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!