பைக் மீது லாரி மோதல்; இருவர் படுகாயம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் லாரி மோதி 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன், 27; இவரது நண்பர் கருப்பையா மகன் விஜய், 26; இருவரும் கடந்த 12ம் தேதி மதியம் 2:30 மணியளவில் பிளெண்டர் பிளஸ் பைக்கில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை விஜய் ஓட்டினார்.
ஏமப்பேர் புறவழிச்சாலை பி.எஸ்.என்.எல்., டவர் அருகே சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் வேகமாக வந்த லாரி மோதியதில், மணிகண்டன், விஜய் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடன் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில், லாரி டிரைவர் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வேப்பூரைச் சேர்ந்த ராமதாஸ், 52; மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!