திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
நெல்லிக்குப்பம் : கீழ்பட்டாம்பாக்கம், திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 6ம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
12ம் தேதி சிறப்பு அபிஷேகம், அர்ஜூனன் - திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இருவரும் தம்பதி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் பெருமாள் மற்றும் அர்ஜூனன் சமேதராய் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!