திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு துப்புரவு முகாம் நடந்தது.துப்புரவு ஆய்வாளர் ராஜா வரவேற்றார். கமிஷனர் கீதா முன்னிலை வகித்தார். நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி துப்புரவுப் பணியை தொடங்கி வைத்தார்.
துணைத் தலைவர் மகேஸ்வரி குணா, வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.துப்புரவு மேற்பார்வையாளர்கள் செந்தில், கார்த்திகேயன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் அரசு மருத்துவமனை வளாகம், என்.ஜி.ஜி.ஓ., நகர், ஆஞ்சநேயர் கோவில் வளாகம், சந்தைப்பேட்டை காலனியில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!