ஆத்தூரில் முதல்வர் தலைமையில் நடக்கவிருந்த கூட்டம் ஒத்திவைப்பு
ஆத்துார்,-ஆத்துாரில், வரும், 18ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டம், மழையால் ஒத்திவைக்கப்படுகிறது,'' என, அமைச்சர் நேரு கூறினார்.சேலம் மாவட்டம், ஆத்துார், செல்லியம்பாளையத்தில், தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வரும், 18ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, அக்கட்சியினர் மேற்கொண்டனர். நேற்று, அப்பணிகளை ஆய்வு செய்ய வந்த, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது:மே, 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த கூட்டம், ஆத்துாரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நாளை(இன்று) முதல், 5 நாள் கனமழை இருப்பதாக, இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதால், தற்போது கூட்டம் நடத்த வேண்டாம் என, முதல்வர் கூறினார். இதனால், அந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இன்று நாளிதழில், 5 நாளைக்கு மழை உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால்தான் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். வரும், 25ல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மத்திய மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்களான, சேலம் கிழக்கு சிவலிங்கம், மேற்கு செல்வகணபதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!