dinamalar telegram
Advertisement

சிலவரி செய்திகள்: சேலம்;;;

Share
21ல் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிசேலம்: சேலம் மாவட்ட அளவில், ஆண்கள் ஹாக்கி லீக் போட்டி, காந்தி விளையாட்டரங்கத்தில், வரும், 21 காலை, 8:00 மணிக்கு தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க வயது வரம்பில்லை. சேலம் மாவட்டத்தினர் மட்டும் பங்கேற்கலாம். விரும்பும் வீரர்கள், புகைப்படத்துடன் கூடிய, அசல் அடையாள அட்டை, அதன் நகலை கொண்டு வர வேண்டும். வெற்றிபெறும் அணி, மண்டல போட்டிக்கு தகுதி பெறும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்தார்.இன்று விஷ்ணுபதி புண்யகால பூஜைசேலம்: வைகாசி பிறப்பை முன்னிட்டு சேலம் விஷ்ணுபதி கமிட்டி சார்பில், அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனுாரில் உள்ள ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி யாகத்துடன் விஷ்ணுபதி புண்யகால பூஜை நடக்கிறது. யாகத்தில், 11 கலசங்கள் வைத்து, வாஸ்து பூஜை, திருமண தடைகளை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம், ஆரோக்கியத்தை அள்ளித்தரும், 'மிருத்யுஞ்ஜெய்' யாகம் உள்பட, உலக நன்மை வேண்டி, மகா சுதர்சன யாகம் நடக்கிறது. இதில் பங்கேற்போருக்கு வீடு கட்டுவதில் உள்ள சிக்கல், திருமண தடை, தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.ஒட்டுமொத்த துாய்மை பணிபனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்துகளில், ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த துாய்மை பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பஸ் ஸ்டாப், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் குப்பையை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. பொது இடங்களில் ஒட்டியிருந்த சுவரொட்டிகளும் அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட்டு, மஞ்சள் பை பயன்படுத்த, வணிக நிறுவனங்கள், ஓட்டல், காபிபார் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். முகாமில், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.30 மதுபாட்டில் பறிமுதல்சேலம்: ஏற்காடு, அடிவாரத்தில் உள்ள வன சோதனைச்சாவடியில், வாகன தணிக்கை நேற்று நடந்தது. அப்போது, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் சின்னதம்பி தலைமையில் வனத்துறையினர், இயற்கை குழுவினர், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், பிளாஸ்டிக் பாலிதீன் பை - 300, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் - 100, மதுபாட்டில் - 30 பறிமுதல் செய்தனர். இன்றும் வாகன தணிக்கை தொடரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 11 ஆயிரம் முதல், 13 ஆயிரத்து, 969 ரூபாய், டி.சி.எச்., ரகம், 10 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து, 990 ரூபாய் வரை விலைபோனது. 1,305 மூட்டைகள் மூலம், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.ரூ.2.20 கோடிக்கு ஆடுகள் விற்பனைஇடைப்பாடி: கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு, நேற்று ஏராளமான ஆடுகளை, விவசாயிகள் கொண்டுவந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 6,050 முதல், 6,400 ரூபாய், செம்மறியாடு, 6,000 முதல், 6,150 ரூபாய் வரை விலைபோனது. 3,200 ஆடுகள் மூலம், 2 கோடியே, 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.போலீசுக்கு இன்று கண் பரிசோதனைசேலம்: அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு, தனியார் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம், கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில் கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற கோளாறு இருந்தால் பரிசோதனை செய்யப்பட்டு குறைந்த விலையில் கண் கண்ணாடி வழங்கப்படும்.சேலத்தில் கனமழைசேலம்: சேலத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு தொடங்கிய தொடங்கிய மழை, 8:30 மணி வரை கொட்டியது. கிச்சிப்பாளையம், நாராயண நகர், சங்கர் நகர், அழகாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டையாக தேங்கியது. சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. கோடை வெயில் தொடங்கிய பின், நேற்று பெய்த கனமழையால், குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. அதேபோல், வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.வனத்துறை சார்பில் மரக்கன்று நடவுஆத்துார்: முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டையொட்டி, ஆத்துார் மாவட்ட வன அலுவலகம் சார்பில், காட்டுக்கோட்டை அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நேற்று, மாவட்ட வன அலுவலர் சுதாகர், வனச்சரகர் செந்தில்குமார் மரக்கன்று நட்டனர். அதேபோல், வாழப்பாடி, தலைவாசல், பச்சமலை, பெரியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.தட்டுப்பாட்டால் தக்காளி விலை உயர்வுபனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தக்காளி சாகுபடி குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது. பாரப்பட்டி, கம்மாளப்பட்டியில் ஓரிரு தோட்டத்தில், கிலோ, 70 ரூபாய்க்கு விற்கின்றனர். அதுவும் போதிய அளவில் கிடைக்கவில்லை. வெளியூரில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளி, கிலோ, 90, 100 ரூபாய்க்கு விற்கின்றனர். தற்போது தக்காளி செடி நடவு செய்து வருகின்றனர். அது அறுவடைக்கு வந்தால் விலை குறையும் என, உழவர் சந்தை விவசாயியான, பனமரத்துப்பட்டியை சேர்ந்த தங்கவேல் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement