சின்ன காலாப்பட்டில் சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி : சின்ன காலாப்பட்டில் சாலை அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.காலாப்பட்டு தொகுதி சின்ன காலாப்பட்டு நேதாஜி நகர் மேற்கு தெரு மற்றும் மேட்டு தெரு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 11 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன.
இப்பணிகளை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.மேலும் சாலை பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!