கரூர் டவுன் அரசு மருத்துவமனையில் மண் குளியல் சிகிச்சை தொடக்கம்
கரூர்-கோடைகாலத்தையொட்டி, கரூர் டவுன் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பொதுமக்களுக்கு மண் குளியல் சிகிச்சை தொடங்கியுள்ளது.கரூர் டவுன் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. அதில், கர்ப்பிணி பெண்களுக்கு உணவு மற்றும் யோகா பயிற்சி, மண் குளியல், வாழை இலை குளியல், அக்கு பிரஷர், உணவு முறைகள், மூச்சு பயிற்சி, நீராவி பயிற்சி உள்ளிட்ட, பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.கரூர் மாவட்டத்தில், கோடைகாலத்தையொட்டி, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உடல் சூட்டை குறைக்க மண் குளியல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டாக்டர் சுகுமார் கூறுகையில், ''மண் குளியல் சிகிச்சை நாள்தோறும் காலை, 8:00 முதல், 10:00 மணி வரை நடக்கிறது. இதனால், உடல் சூடு குறையும். தோல் நோய்கள், உடல் அரிப்பு உள்ளிட்ட, பல்வேறு உபாதைகள் வராது. கோடைகாலத்தையொட்டி, மண் குளியல் சிகிச்சையை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!