சிலவரி செய்திகள்: கரூர் ...
மாரியம்மன் கோவிலுக்கு வந்த47 பூச்சொரிதல் ஊர்வலம்கரூர்,-கரூர் மாரியம்மன் கோவிலுக்கு, 47 பூச்சொரிதல் ஊர்வலம் வந்தது.கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த, 8ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று இரவு, கரூர் நகரின் பல பகுதிகளில் இருந்து, 47 பூச்சொரிதல் ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்களுடன் கோவிலுக்கு புறப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்து, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், கோவிலுக்கு பூச்சொரிதல் தேருடன் நடந்து கோவிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 47 பூச்சொரிதல் ஊர்வலமும் கோவிலை அடைந்தது. இன்று காலை மாரியம்மன் கோவிலில், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடக்கவுள்ளது.வேப்பங்குடியில்மருத்துவ முகாம்கிருஷ்ணராயபுரம், மே 15-வேப்பங்குடியில், மருத்துவத்துறை சார்பில், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேப்பங்குடியில் பொது மருத்துவத்துறை சார்பில் காய்ச்சல் முகாம் நடந்தது. இதில், பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய மருத்துவ பரிசோதனைகள் பார்க்கப்பட்டன. முகாமில், டாக்டர் நரேஷ்குமார் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். மேலும் மருந்து, மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணியில் மருத்துவ செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி கரூர் வந்தார்கரூர், மே 15-தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மதுரை செல்லும் வழியில் கரூர் வந்தார்.அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, நேற்று காலை சேலத்திலிருந்து, மதுரைக்கு கார் மூலம் புறப்பட்டார். கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூர் பகுதிக்கு காலை, 10:30 மணிக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அவரை தொடர்ந்து, மாவட்ட அவை தலைவர் திருவிகா, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், பகுதி செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.முன்னாள் ராணுவ வீரர்களுக்குவேலைவாய்ப்பு கருத்தரங்கம்கரூர், மே 15---கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் ராணுவ வீரர்கள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் மற்றும் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமைவகித்து பேசியதாவது:கூட்டத்தில், 126 முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் கலந்துகொண்டனர். மேலும், 32 கோரிக்கை மனுக்கள் வழங்கினர். அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடிநாள் நிதி கடந்தாண்டு இலக்கை விட அதிகளவில் சேகரிக்கப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் அதிகளவில் நிதி சேகரிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 392 ரூபாய் மதிப்பில், 9 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கல்வி உதவித்தொகை, வங்கி கடன் வட்டி மானியம், மாதாந்திர நிதி உதவி, கண் கண்ணாடி நிதி உதவி மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!