பா.ஜ., அரசில் தலைமை மாற்றமா? தொடர் கூட்டங்களால் அரசியலில் பரபரப்பு
பெங்களூரு : ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரமுகர்கள், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரை, முதல்வர் பசவராஜ் பொம்மை பல முறை சந்தித்ததால், தலைமை மாற்றமா என்று கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா இறங்கிய பின், அவரது ஆதரவாளர் பசவராஜ் பொம்மை, கடந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையிலான ஆட்சி, இம்மாதத்துடன் பத்து மாதங்கள் நிறைவுபெறுகிறது. ஆனாலும் அவரது நிர்வாக திறன் மீது பா.ஜ., மேலிடத்துக்கு திருப்தி ஏற்படவில்லை. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால், பலம் வாய்ந்தவர் தலைமையில் தேர்தலை சந்திக்க பா.ஜ., மேலிடம் யோசிப்பதாக தெரிகிறது.கர்நாடகாவில் இரண்டு முறை பா.ஜ., ஆட்சி அமைந்த போதும், முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இம்முறை தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பிடிக்க வேண்டும் என்பது கட்சியின் திட்டமாகும். எனவே தலைமையை மாற்றலாமா என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.ஒரே நாளில் இரண்டு முறை, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கும் இரண்டு முறை சென்று, முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
எம்.எல்.சி., மற்றும் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தலைமை மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில், கர்நாடா பா.ஜ.,வில் சில நாட்களில் பெரிய மாற்றம் நிகழும் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றம் என்னவாகும் இருக்கும் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!