dinamalar telegram
Advertisement

மழை நீர் கால்வாய் சீரமைக்க உத்தரவு

Share

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி, அண்ணா நகர் பகுதியில், ரயில்வே இருப்பு பாதை அருகில், மழை நீர் கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் வாயி லாக, ரயில்வே இருப்பு பாதை வழியாக மழை நீர் ஓடி, கொளவாய் ஏரிக்கு செல்கிறது.


மழை காலங்களில், எளிதில் செல்ல முடியாமல் தேங்கி, நகர் முழுதும், மழை நீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.கால்வாயிலிருந்து மழை நீர் முழுமையாக வெளியேற, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.தொடர்ந்து, கலெக்டர் ராகுல்நாத் நேற்று, இப்பகுதியில் ஆய்வு செய்து மழை நீர் கால்வாயை சீரமைக்க, நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement