டூ - வீலர்கள் பார்கிங் ஆன பஸ் நிழற்குடை
திருத்தணி : பேருந்து நிழற்குடையில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால், பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், இ.என். கண்டிகை பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இ.என்.கண்டிகை, செருக்கனுார் கிராமம், காலனி, ராமகிருஷ்ணாபுரம், சாமந்திபுரம் உட்பட 10 கிராம மக்கள் வந்து, திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்க்கத்திற்கு பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர்.
இங்கு பயணியர் வசதிக்காக, 15 ஆண்டுகளுக்கு முன், திருத்தணி மார்க்கம் செல்லும் சாலையோரம் நிழற்குடை அமைக்கப்பட்டது.இந்த நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது, சேதம் அடையும் நிலை உள்ளது.தற்போது, பயணியர் நிழற்குடையில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கம்பெனி வேலைக்கு செல்கின்றனர். இதனால் பயணியர் வெயில் மற்றும் மழையில் நனைந்தவாறு, சாலையோரம் காத்திருந்து பேருந்து வந்தவுடன் ஏறிச் செல்கின்றனர்.எனவே, பயணியர் நிழற்குடை சீரமைத்தும், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உடனடியாக பேருந்து நிழற்குடையில் ஆய்வு செய்து வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்படும். மேலும், நிழற்குடை விரைவில் சீரமைக்கப்படும்' என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!