பஸ் நிறுத்தத்தில் அடிப்படை வசதிகள் வருமா?
எருமப்பட்டி,-எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் பஸ் நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பயணிகள், பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் காத்துள்ளனர். இதனால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பயணிகள் அமர இருக்கைகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தாமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வேலைக்கு சென்று விட்டு வரும் பெண்கள் பஸ்சில் இருந்து இறங்கி செல்லவும், பஸ்சில் ஏற வந்து காத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக மின் விளக்கும், முதியவர்கள் அமர இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!