பிரதான குழாயில் உடைப்பு; பெரிய காஞ்சியில் குடிநீர் வீண்
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம் சாலைத்தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகியது.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றில் இருந்து,
ஆழ்துளை கிணறு மூலம், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இதில், பெரிய காஞ்சிபுரம் சாலை தெருவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறியது.மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெரு, வடக்கு மற்றும் தெற்கு கிருஷ்ணன் தெருவில், பல ஆண்டுகளாக வீட்டு குழாயில் குடிநீர் வராமல், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சாலை தெருவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.குழாயில் ஏற்பட்ட உடைப்பை, அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!