மழையால் தக்காளி விலை அதிகரிப்பு
பள்ளிபாளையம்,-பள்ளிபாளையம் பகுதியில், 40 ரூபாய்க்கு விற்பனை செய்த தக்காளி, தற்போது கிலோ, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தக்காளி வியாபாரிகள் கூறியதாவது: மழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. அதனால், ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை குறைந்து, மீண்டும் அறுவடை துவங்கினால், தக்காளி வரத்து அதிகரிக்கும் போது தான், விலை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'ஓய்வு' அலுவலர் சங்கக்கூட்டம்ராசிபுரம், -ராசிபுரத்தில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் தாளமுத்து வரவேற்றார். கூட்டத்தில், மத்திய அரசு கடந்த ஜனவரி, 1ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அதேபோல், தமிழக அரசும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தரவேண்டும்.மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 4 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்தில், ஓய்வூதியர் எந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தாலும், அவருக்கு மருத்துவ செலவை ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துாய்மை பணியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்புநாமக்கல்,-நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லுாரி விடுதிகளில், காலியாக உள்ள, 21 பகுதிநேர துாய்மைப் பணியாளர் பணியிடங்கள், மாதம், 3,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. அதில் ஆண், 14, பெண், 7 என, பகுதிநேர துாய்மைப் பணியாளர் காலியிடங்கள் உள்ளன. இந்த, 21 காலிப்பணியிடங்கள், நேர்காணல் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில், பகுதி நேர துாய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விண்ணப்பத்தை, நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல் இணைத்து, 30ல், மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!