dinamalar telegram
Advertisement

மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

Share
ஈரோடு,-ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள, மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனையில், ஈரோடு தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நேற்று நடந்தது. நிலைய அலுவலர் முத்துராமசாமி தலைமை வகித்தார். மருத்துவமனையில் மின் கசிவு உள்ளதா?, அனைத்து மின் சாதன பொருட்களும் முறையாக இயங்குகிறதா? என சோதனை செய்வது அவசியம்.ஒரே மின் பிளக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் சாதன பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது. தீ அல்லது புகை ஏற்பட்டால் உடனடியாக செய்யக் கூடிய பணி, நோயாளிகளை அப்புறப்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் விதம் குறித்து ஒத்திகையும் செய்து காட்டப்பட்டது. டாக்டர், செவிலியர், அலுவலர், மாநகராட்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement