சிலவரி செய்திகள்: ஈரோடு...
தடுப்பு சுவரில் மோதிய லாரி சத்தியமங்கலம்,-சத்தியமங்கலம் அருகே தடுப்பு சுவரில் மோதி நின்ற லாரி டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.நாமக்கல்லிருந்து முட்டை ஏற்றிய ஒரு லாரி, கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புறப்பட்டது. சத்தியமங்கலம் அருகில் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் நேற்று சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த சென்டர் மீடியனில் ஏறி நின்றது. லாரியில் இருந்த இரு டிரைவர்களும் காயமின்றி தப்பினர்.கேரளா மாநில வாலிபர் போக்சோவில் கைதுபெருந்துறை,-பெருந்துறை, வரப்பாளையத்தை சேர்ந்த, 18 வயது சிறுமி, தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 10ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பெருந்துறை போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில், கேரளா, வடக்கஞ்சேரியை சேர்ந்த அஜய், 25, சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. போக்சோ சட்டத்தில் அஜயை கைது செய்த போலீசார், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.சாலையோரம் மருத்துவ கழிவுஈரோடு,-ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்து, கனிராவுத்தர் செல்லும் வழியில், அரசு மேல்நிலை பள்ளி அருகே, மருத்துவ கழிவு கிடப்ப தாக, நேற்றிரவு தகவல் கிடைத்தது. கருங்கல்பாளையம் போலீசார் சென்று பார்த்தனர். காலி ஊசி மருந்து பாட்டில், சிரஞ்ச், நீடில், குளுக்கோஸ் ஏற்ற பயன்படும் டியூப் உள்ளிட்டவை சாலையோரம் கிடந்தது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மருத்துவ கழிவுகளை முழுமையாக அகற்றினர்.மருத்துவ கழிவு குவியலில், பள்ளிபாளையம் சங்ககிரி பைபாஸ் சாலை பகுதியில் உள்ள, ஒரு மருந்துக்கடையின் பில் இருந்தது. அதில் டாக்டர் ஒருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்த, மாநகராட்சி அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!