கடன் தொல்லையால் தலைமை ஆசிரியை தற்கொலை
காங்கேயம்-காங்கேயத்தில் கடன் தொல்லையால், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியது. காங்கேயத்தில், திருப்பூர் சாலையில், பாரதியார் வீதியில் வசிப்பவர் குணசேகரன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பானுஸ்ரீ கார்த்திகா, 42; படியூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர்களுக்கு ஏழு வயதில் மகன் உள்ளார். மகன் மற்றும் நண்பர்களுடன் குணசேகரன், கடந்த, 12ம் தேதி திருச்செந்துாருக்கு சென்று விட்டார். வீட்டில் பானுஸ்ரீ கார்த்திகா மட்டும் இருந்தார். நேற்று முன்தினம் காலை குணசேகரன் மனைவியுடன் போனில் பேசியுள்ளார். அதன் பிறகு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை குணசேகரன் வீடு திரும்பினார். வீட்டு காம்பவுண்ட் கேட் உட்புறம் பூட்டப்பட்டிருந்தது.சத்தமிட்டும் பானுஸ்ரீ கார்த்திகா வெளியே வராததால், சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்குள் சென்றார். படுக்கை யறையில் பானுஸ்ரீ கார்த்திகா துாக்கில் தொங்கியபடி இருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தலைமை ஆசிரியை சாவுக்கான காரணம் குறித்து, காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில், கடன் பிரச்னையால் விபரீத முடிவை நாடியது தெரிய வந்துள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!