அறுந்து விழுந்த மின் கம்பி; ௪ பசுக்கள் பலியான சோகம்
வெள்ளகோவில்,-வெள்ளகோவில் அருகே, மின் கம்பி அறுந்து விழுந்ததில், தோட்டத்தில் மேய்ந்த நான்கு மாடுகள் பலியானது.
வெள்ளகோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் விசாலாட்சி. பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அவருக்கு சொந்தமான தோட்டத்தில், நேற்று முன்தினம் மாலை பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது வீசிய பலத்த காற்றில், தோட்டம் வழியாக சென்ற மின் கம்பி அறுந்து, தோட்டத்து இரும்பு வேலியில் விழுந்தது. அப்போது மின்சாரம் தாக்கியதில் நான்கு பசுமாடுகள் சம்பவ இடத்தில் பலியாகின. இறந்த மாடுகளின் மதிப்பு, 2.75 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!