சிலவரி செய்திகள்: ஈரோடு
ரூ.82 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 2,120 மூட்டைகளில், 98 ஆயிரம் கிலோ வரத்தானது.இதில் முதல் தரம் ஒரு கிலோ, 84.55 ரூபாய் முதல், 90.20 ரூபாய் வரை விலை போனது. இரண்டாம் தரம், ௫௧ ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 82 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.மல்லிகை பூ விலை ஒரு கிலோ ரூ.787சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ மல்லிகை பூ, 787 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை ஒரு கிலோ, 160 ரூபாய், காக்கடா, 475, செண்டுமல்லி, 64, கோழிக்கொண்டை, 91, சம்பங்கி, 50, கனகாம்பரம், 750, அரளி பூ, 100, துளசி, 40, செவ்வந்தி, 180 ரூபாய்க்கும் விற்பனையானது.ரூ.4.65 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனைகோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 40 ரூபாய், நேந்திரன், 38 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 410, தேன்வாழை, 490, செவ்வாழை, 610, மொந்தன், 300, ரஸ்த்தாளி, 410, ரொபஸ்டா, 300, பச்சைநாடான், 280 ரூபாய்க்கும் விலைபோனது. வரத்தான, 2,720 வாழைத்தார்களும், 4.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில், ஒரு காய் ஒன்பது ரூபாய் முதல், 14 ரூபாய் வரை விலை போனது. வரத்தான, 6,200 தேங்காய்களும், 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 44 விவசாயிகள், 11 ஆயிரத்து, 831 தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 26.65 ரூபாய், இரண்டாம் தரம், 20.65 ரூபாய் என, 1.௦௯ லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார். இதேபோல் சொசைட்டியில் கொப்பரை ஏலம் நடந்தது. மொத்தம், 1,140 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 66 ரூபாய் முதல், 87.15 ரூபாய் வரை விலை போனது.காய்கறி விலை கடும் உயர்வுஈரோடு: ஈரோட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டில், நேற்று தக்காளி விலை, கிலோ, 70 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்றது. இதேபோல் அவரைக்காய் கிலோ ரூ.100, பீன்ஸ் ரூ.80, பாவற்காய் ரூ.80, முருங்கை காய் ரூ.80, முள்ளங்கி ரூ.50, கேரட் ரூ.50, பீட்ரூட், 40 முதல், 60 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு, 10 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!