கடனுக்கு ஜாமின் தந்தவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கொடுமுடி,-கொடுமுடி அருகேயுள்ள தளுவம் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 42; கரூரில் டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை செய்யும் ஊழியர் வசந்தி. ராசாம்பாளையத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு, வசந்தியிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக சண்முகம் ஜாமின் தந்துள்ளார். சிலம்பரசன் பணம் தராத நிலையில், சண்முகத்திடம் வசந்தி பணம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் சாலைப்புதுாரில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை, வசந்தியின் மகன் பிரவீன், சக்திவேல் மற்றும் தளுவம்பாளையத்தை சேர்ந்த தர்மலிங்கம், காரில் கடத்திச் சென்றனர். பணத்தை கேட்டு தாக்கியுள்ளனர். கொடுமுடி போலீசில் சண்முகம் புகார் கொடுத்தார். இதன்படி பிரவீன், தர்மலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!