dinamalar telegram
Advertisement

பா.ம.க., எந்த பேரத்துக்கும் படியாது: அன்புமணி

Share
தர்மபுரி, -''பா.ம.க., வரும் காலத்தில் எந்த பேரங்களுக்கும் படியாமல், 2.0 வை நோக்கி முன்னோறும்,'' என, பா.ம.க., இளைஞர் அணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அன்புமணி கூறினார்.தர்மபுரி மாவட்ட, பா.ம.க., பொதுக்குழுக்கூட்டம், தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நேற்று நடந்தது. பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேசியதாவது:தர்மபுரி மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையான ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை, தி.மு.க., ஆட்சி அமைந்த, 35 ஆண்டுகளுக்கு பின் தான் செயல்படுத்த துவங்கியது. அ.தி.மு.க., வும், பல ஆண்டுகளுக்கு பின் இந்த திட்டத்தை துவங்கியது. இத்திட்டத்தை துவங்கியது தொடர்பாக, இவ்விரு கட்சிகளுக்கும் போட்டியுள்ளது. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவங்கியதற்கு, பா.ம.க., தான் முக்கிய காரணம். தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தப்படும் என, கடந்த லோக்சபா தேர்தலின் போது அப்போதைய முதல்வர் பழனிசாமி, மாவட்டத்தில், பல இடங்களில் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளேன். இது நடைமுறைபடுத்தப்பட்டால், தர்மபுரி மாவட்டம் வளம் பெறும். வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பேசியுள்ளேன். இது வன்னியர்களுக்கானது மட்டும் இன்றி, சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு. இதை நிறைவேற்றா விட்டால், பா.ம.க., மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும். அதற்கான தேவை இருக்காது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வில்லை. அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என, அக்கட்சி நிதி அமைச்சரே சட்டசபை கூட்டத்தில் பேசியுள்ளார். பஸ் கட்டணம் உயர்வு இருந்தால் அதை எதிர்த்து பா.ம.க., போராடும். இலங்கை அதிபர், முன்னாள் ராணுவ அமைச்சரை, போர் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றம் கைது செய்ய வேண்டும்.பா.ம.க., வரும் காலத்தில் எந்த பேரங்களுக்கும் படியாமல், 2.0 வை நோக்கி முன்னோறும். அதற்கான, பல திட்டங்கள் எங்களிடம் உள்ளது. அதை தெரிவித்தால், பிற கட்சிகள் காப்பி அடித்து விடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement