சிலவரி செய்திகள்: தர்மபுரி..
ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள் பீதிஒகேனக்கல்,- ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையோரம் சுற்றித்திரியும், ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். கோடை விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். நேற்று மதியம், முன்டச்சி பள்ளம் என்ற இடத்தில், ஒற்றை யானை நீண்ட நேரமாக சாலையோரத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதனால், அவ்வழியே வந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்து, வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்றனர். அங்கு வந்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடம் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது; மேலும், கல் எறிவது, கூச்சலிடுவது, 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என, எச்சரித்தனர்.
கி.கிரியில் ரூ.27.5 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் துவக்கம்கிருஷ்ணகிரி, -கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு திட்ட பணிகளை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., அசோக்குமார் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி அடுத்துள்ள அகசிப்பள்ளி, பெத்தனபள்ளி பஞ்.,க்குட்பட்ட கனகமுட்லு, பங்கிகொட்டை, கொய்யகொட்டாய், பாறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 27.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கழிவுநீர் கால்வாய், கான்கிரீட் சாலை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை, கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அம்சா ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெயா ஆஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!