dinamalar telegram
Advertisement

சிலவரி செய்திகள்: தர்மபுரி

Share
எஸ்.எஸ்.எல்.சி., உருது தேர்வு தர்மபுரி,-தமிழகத்தில் கடந்த, 6ல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு துவங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி., உருது தேர்வு நடந்தது. இதில், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உருது படிக்கும், 14 மாணவர்கள் நேற்று, ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் உருது தேர்வு எழுதினர்.நிலத்தகராறில் மோதல் 3 பேர் மீது வழக்குகம்பைநல்லுார்,-கம்பைநல்லுார் அடுத்த கெட்டுப்பட்டியை சேர்ந்தவர் சம்பத், 53, இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களுக்கும் பூர்வீகச் சொத்தான, 3 ஏக்கர் நிலம் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த, 13ல் வி.ஏ.ஓ., சர்வேயர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அளவீடு செய்து நட்ட முட்டுக்கல் பிடுங்கப்பட்டது. இது குறித்து சம்பத் கேட்ட போது, அதேப் பகுதியை சேர்ந்த உறவினர்கள் செல்வராஜ், ராமு, விஜியா ஆகிய மூன்று பேரும், சம்பத்தை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகார்படி, செல்வராஜ், ராமு, விஜியா ஆகியோர் மீது கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைதுஓசூர்,-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.,ரோடு பகுதியில் நேற்று ஓசூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஹோண்டா ஆக்டிவா பைக்கில் சென்றவரை மடக்கி சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர் ஓசூரை சேர்ந்த சென்னாராம், 31, என்பதும், அதே பகுதியில் பெட்டிகடை நடத்தி வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement