சேலத்தில் 63 ஆயிரம் பேருக்கு 21ல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு
சேலம்,-மே, 21ல் நடக்க உள்ள, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், சேலம் மாவட்டத்தில் இருந்து, 63 ஆயிரத்து, 437 பேர் பங்கேற்க உள்ளனர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:வரும், 21ல் நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், சேலம் மாவட்டத்தில், 161 மையங்களில், 63 ஆயிரத்து, 437 தேர்வர் பங்கேற்க உள்ளனர். காலை, 9:30 முதல், 12:30 மணி வரை நடக்க உள்ள தேர்வை கண்காணிக்க, 12 பறக்கும் படை, 55 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள், அனுமதி சீட்டை எடுத்து வருவது அவசியம். மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையங்களில் வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மையம், மாவட்ட கருவூலங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!