சிலவரி செய்திகள்: சேலம்
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலிவாழப்பாடி: பழனி பண்டார வீதியை சேர்ந்தவர் சிவகங்கை, 85. இவர், கடந்த, 12 இரவு, 9:00 மணிக்கு, 'ஸ்டவ்' அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது சேலையில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார். அவரை, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.லஞ்ச புகாரால் எஸ்.எஸ்.ஐ., மாற்றம்ஆத்துார்: ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் மணிவேல். இவர், வழக்கு விசாரணைக்கு லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அவரை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், நேற்று உத்தரவிட்டார். போதையில் வாலிபருக்கு கத்திக்குத்து சேலம்: தாதகாப்பட்டி, பராசக்தி நகரை சேர்ந்தவர் சதீஷ், 23. இவரது நண்பர் அப்ரீத் உள்பட, 3 பேர், வாய்க்கால்பட்டறையில் நேற்று முன்தினம் மதுபானம் அருந்தினர். அப்போது, சதீஷின் மொபைல் போனை வாங்கிய அப்ரீத் திருப்பித்தரவில்லை. இதில் ஏற்பட்ட தகராறில், சதீஷின் கழுத்து பகுதியில், கத்தியால் குத்திவிட்டு அப்ரீத் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த சதீஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!