dinamalar telegram
Advertisement

ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்

Share
ஏற்காடு-ஏற்காட்டில் சில நாளாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மலைப்பாதையில் உள்ள, 2, 3வது கொண்டை ஊசி வளைவுகள் இடையேயும், 60 அடி பாலம் - 40 அடி பாலம் இடையேயும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அடிவாரத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள், குப்பனுார் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையினர், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், பொக்லைன் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement