புகார் பெட்டி.... முட்புதர் அகற்றப்படுமா?
திருத்தணி அடுத்த, செருக்கனுார் - சித்தேரி கரையின் மீது அமைக்கப்பட்ட தார்ச்சாலை வழியாக, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் லாரிகள் மூலம் கே.ஜி.கண்டிகை, திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், அதிகாலை 5:00 மணி முதல், இரவு 10:30 மணி வரை அதிகளவில் இருசக்கர வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.இந்நிலையில், சாலையோரம் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர்.எனவே, ஏரிக்கரை சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டுகிறேன்.இ. சேட்டு, செருக்கனுார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!