Load Image
Advertisement

சீக்ரெட் சிங்காரம்


குஷில புல்லுக்கட்டு

கர்நாடகாவுல எல்லா கட்சியும் தேர்தலுக்கு தயாராகும் வேலையை பார்த்துட்டு வராங்க. ரெண்டு தேசிய கட்சிலயும் உட்கட்சி குழப்பத்தால தேர்தல் வேலை சுணக்கம் இருப்பது போல இருக்கு. ஆனா புல்லுக்கட்டு மட்டும் 'சைலன்டா' கர்நாடகா முழுவதும் யாத்திரை துவங்கி நடத்தி முடிச்சிருச்சி. தலைநகர்ல இறுதி பொதுக்கூட்டம் நடந்தது.இதுல எதிர்பார்த்ததை விட அதிகமாவே தொண்டர்கள் கூட்டம் கூடிடுச்சி. இதை பார்த்த தொட்ட கவுடரு, இளைய தலைவருன்னு குடும்பமே சந்தோஷத்துல மிதந்து இருக்காங்க.இந்த கூட்டத்தை பார்த்து மத்த கட்சிக்காரங்க கூட கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்காங்களாம். இத்தனை நாள் துாக்கத்தில் இருந்தவர்கள் போல இருந்த கட்சி நிர்வாகிகளுக்கும் புத்துணர்வு வந்திருக்காம்.இதே ஜோர்ல நடக்க இருக்கற சட்டசபைக்கான தேர்தல் வேலைகளை பார்க்க ஆரம்பிச்சி இருக்காங்க. போன தேர்தல் நேரத்துல கூட இப்படித்தான் ஒரு கூட்டம் நடத்தி பெரும் கூட்டத்தை கூட்டி இருந்தாங்க.அதுதேர்தல்ல பலனை கொடுத்திச்சி. அதே மாதிரி இந்த முறையும் தேர்தல்ல நல்ல ரிசல்ட் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறாங்க.


இத்தனை நாள் எங்கிருந்தாரு!

ஆளுங்கட்சில அமைச்சரவையை மொத்தமா காலி பண்றதா, இல்ல சில பேரை மட்டும் நீக்கறதான்னு ஆலோசனை போயிட்டு இருக்கு. இதனால பல அமைச்சருக்கு துாக்கம் போயிடுச்சி.அமைச்சரவைல செயல்படாத அமைச்சர்கள் யார்னும் ஒரு 'லிஸ்ட்' தயாராகி இருக்கு. அதனால இத்தனை நாள் இருக்கற இடம் தெரியாம இருந்த அமைச்சர்கள் எல்லாம் இப்போ சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிச்சிட்டாங்க.அதுல ஒருத்தருதான் சர்க்கரை அமைச்சரு. இவரை அவங்க தொகுதி ஜனங்களுக்கே தெரியுமோ என்னமோ தெரியாது. அப்படி இருக்கும் தொகுதியை தாண்டி எப்படி தெரியும்.செயல்படாத அமைச்சர்னு முத்திரையை குத்தி தன் பதவியை பறிச்சிட்டா எப்படின்னு நினைச்சிருக்காரு. இதனால தன் துறைல இருக்கற பாக்கி தொகை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டாரு. அதை சீக்கிரம் வசூல் செய்வேன்னும் முழங்கினாரு.அதுக்கு அப்புறம்தான் கர்நாடக மக்களுக்கு 'ஓ' இப்படி ஒரு அமைச்சரு இருக்காரான்னே தெரியவந்துச்சி.

டில்லி உத்தரவாம்!
ஐந்து மாநிலத்துல படுதோல்விக்கு அப்புறம் கதர் கட்சிக்காரங்க தன்னோ பலத்த எப்படி நிரூபிக்கிறதுன்னு ஆலோசனை மேல ஆலோசனை நடத்திட்டு வராங்க. அதே நேரத்துல தன் கட்சி ஆட்கள் காவி கட்சிக்கு தாவுவது தொடர்கதையாகி வருவது தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கு. அடுத்து மைசூரு 'பெல்ட்' பகுதில இருக்கற சிலரை லிஸ்ட் போட்டு துாக்க இருக்காங்க.இதுக்கான பேச்சும் நடத்திட்டு இருக்கு. இது இங்க இருக்கற தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்குதோ இல்லையோ டில்லி தலைவர்களுக்கு ஷாக்கிங்கா இருக்கு.இது பாலைவன மாநிலத்துல நடக்குற கூட்டத்துல எதிரொலிச்சி இருக்காம். கூட்டத்துல பங்கெடுத்த டில்லி தலைவர்கள் எல்லாம் இனியும் நம்ம கட்சிக்காரங்க காவிக்கு தாவ கூடாது. அங்க இருந்துதான் நம்ம கட்சிக்கு வரணும். அதுக்கு என்ன பண்ணனுமோ செய்யுங்கன்னு உத்தரவிட்டிருக்காங்களாம்.

எவ்வளவு பங்கு!
கொஞ்ச நாள் நடக்கற விஷயங்கள் எல்லாமே சாதகமா இருந்ததால ஆளும் தரப்பு சந்தோஷமாக இருந்தாங்க. இப்போ எல்லா விஷயமும் எதிராக இருக்கிறதால கொஞ்சம் அதிர்ச்சில இருக்காங்க. எதிர்க்கட்சிக்காரங்க இதை கெட்டியா புடிச்சிட்டு இருக்காங்க. இதை எப்படி ஜனங்க கிட்ட கொண்டு போறது. இத வச்சி ஓட்டுகள் வாங்கறதுன்னு பிளான் போட்டுட்டு இருக்காங்க.எதிர்தரப்பு சந்தோஷமா இருக்கிறதால அவங்களுக்கு எதிராகவும் ஏற்கனவே இருக்கிற புகார்களை வெளி கொண்டு வரனும்னு ஆளுங்கட்சி தரப்பு முடிவு பண்ணி இருக்காங்க.குழந்தைங்க கோள் மூட்டும் போது பக்கத்தில் இருக்கற பையனையும் சேர்த்து சொல்றா மாதிரி எதிர்க்கட்சிக்காரங்களுக்கு எந்த அளவுக்கு தற்போது வெளிவரும் முறைகேடுகளில் பங்கு இருக்குன்னு வெளியிட போறாங்களாம்.ஏற்கனவே வெளிய வராம இருக்கற, நிலுவையில் உள்ள பழைய குப்பையை கிளற முடிவு பண்ணி இருக்காங்களாம். இனி ஒவ்வொண்ணா அவங்க மேலான புகார்கள் வெளியே வரப்போகுது பாருங்கன்னு ஆளுங்கட்சி தொண்டர்கள் சொல்லிட்டு வராங்க.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement