ஆர்.கே.பேட்டையில்கொட்டித் தீர்த்த மழை
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை பகுதியில், அக்னி நட்சத்திர காலகட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் கன மழை கொட்டித் தீர்த்தது.பருவ மழை காலத்தில் கன மழை பெய்ததால், ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன.கடந்த நவம்பர் மாதம் முதல், ஜனவரி மாதம் வரை, நீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்தது.மார்ச் மாத இறுதியில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்தது.
கோடை கால பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் தவித்து வந்தனர்.இந்நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளிலேயே மழை கொட்டித் தீர்த்தது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அதை தொடர்ந்து மழை காரணமாக, வானிலை மந்தமாகவே காணப்பட்டது.இரண்டு நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று மாலை, மீண்டும் கன மழை கொட்டித் தீர்த்தது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!