நிரம்பி வழியும் குப்பை தொட்டி; சுற்றுலா பயணியர் முகம் சுளிப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில் சேகரமாகும் குப்பையை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக அகற்ற வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், காஞ்சிபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
புகார்
இப்பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்காக, மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை முறையாக அகற்றுவதில்லை என, இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:வடக்கு மாட வீதியில் சேகரமாகும் குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை.
குப்பை தொட்டி நிரம்பி வழிந்து, சாலையில் குப்பை கழிவுகள் சிதறிக்கிடக்கின்றன.இதனால் இப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும்நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. காஞ்சிபுரம் வரும் சுற்றுலா பயணியரும் முகம் சுளிக்கின்றனர்.எனவே, ஏகாம்பரநாதர் வடக்கு மாட வீதியில், தொட்டியில்இருந்து, குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!