கண் பரிசோதனை முகாம்
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆர்ய வைசிய இளைஞர் சங்கம் சார்பில் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் ஜோசப் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவினர், 420 பேருக்கு பரிசோதனை செய்தனர். 204 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!