வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.சங்கராபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாலிக் பாஷா. இவரது வீட்டிற்குள் நேற்று மதியம் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. பாம்பை பார்த்ததும் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையில் வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!