மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாளுக்கு கொடுமுடி காவிரியில் தீர்த்தவாரி உற்சவம்
கொடுமுடி,-கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம், வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.இந்நிலையில் காவிரி நதியில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், சூலதேவர், சக்கரத்தாழ்வார் உற்சவர் சிலைகள், காவிரி நதிக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி செய்யப்பட்டது.சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி, இளநீர், பால் மற்றும் தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து காவிரி நதியில் புனித நீராடல் நடந்தது. ராமலிங்க சிவம், ஸ்ரீதர் பட்டாச்சாரியார், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் தீர்த்தவாரியை நடத்தினர். மாலையில் கொடி இறக்கம் நடந்தது.தொடர்ந்து ரிஷப வாகனத்தில் மகுடேஸ்வரர், கருட வாகனத்தில் வீரநாராயண பெருமாள் திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியே நடந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!