வாய்க்காலில் தூர்வாரும் பணி
கிருஷ்ணராயபுரம்,-சிந்தலவாடி சாலை அருகே செல்லும் பிலாறு வடிகால் வாய்க்காலில், துார்வாரும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மேம்பால சாலை அருகே, பிலாறு வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால், வடிகாலில் தண்ணீர் செல்வதில் தடைஏற்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, மாயனுார் பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டு துார்வாரும் பணி நடந்தது. இதில் செடிகள், மரங்கள் அகற்றப்பட்டன. மேலும், மழை காலங்களில் தண்ணீர் விரைவாக வடியும் வகையில் பணி நடந்தது. இப்பணிகளை மாயனுார் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!