நாராயணபுரம் சாலை சீரமைக்க கோரிக்கை
கூடுவாஞ்சேரி : நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரத்தில் சேதமடைந்துள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி, 19வது வார்டில் நாராயணபுரம் உள்ளது. இங்கு 250 குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதி சாலை மண் சாலையாக இருப்பதால், சமீபத்தில் பெய்த மழையில் சகதியாக மாறியுள்ளது.
நாராயணபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை கூறியதாவது:இங்குள்ள சாலைகள், நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளன. வார்டு உறுப்பினராக போட்டியிட்ட அனைவரும், தேர்தலில் வெற்றி பெற்று, சாலை மற்றும் குடிநீர் வசதியை உடனே செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.ஆனால், இந்த வார்டு அ.தி.மு.க., வார்டு என்பதால், இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.நகராட்சி நிர்வாகம், பாகுபாடின்றி அனைத்து வார்டுகளுக்கும் தேவையான வசதிகளை செய்ய வேண்டும். பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்லும் வகையில், சாலையை சீரமைத்து தரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!