இயற்கை உரம் தயாரிக்கும்ஆலையில் கலெக்டர் ஆய்வு
பள்ளிப்பட்டு : ஒன்றித்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேற்று பார்வையிட்டார்.பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பையை இயந்திரத்தில் அரைத்து எடுத்து, இயற்கை உரம் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.இதன் செயல்பாடு குறித்து, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேற்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து, பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில், புனரமைக்கப்பட்டு வரும், சமத்துவபுரத்தையும் பார்வையிட்டார்.முன்னதாக, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!