புதைகுழியான மாற்றுப்பாதைவாகன ஓட்டிகள் கடும் சிரமம்
ஸ்ரீபெரும்புதுார் : செரப்பணஞ்சேரி- - நாட்டரசன்பட்டு சாலையில், தரைப்பாலம் கட்டுமானப் பணி காரணமாக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.படப்பை அருகே, செரப்பணஞ்சேரி- - நாட்டரசன்பட்டு சாலை, ஸ்ரீபெரும்புதுார் கோட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் வாகனங்களில் செல்கின்றனர்.
தாம்பரத்தில் இருந்து, இந்த சாலை வழியாக குருவன்மேடு கிராமத்திற்கு அரசு பேருந்தும் இயக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த சாலையில், இரண்டு இடங்களில் ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை துறை சார்பில், சிறுபாலம் கட்டும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.பாலம் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தின் அருகே, வாகன போக்குவரத்து வசதிக்காக, தற்காலிக மண் சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அமைத்தனர். சமீபத்தில் பெய்த மழையால், மண் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:இந்த சாலையில் தேவையே இல்லாத இரண்டு இடங்களில், தரைப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.வாகனங்கள் செல்ல ஏற்படுத்தப்பட்ட மாற்று வழி, சேறும் சகதியுமாக மாறி, புதைகுழி போல் உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் வாகனங்கள், சேற்றில் சிக்கிக்கொள்கின்றன; இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலைத் துறையினர், தற்காலிக மாற்று வழியை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!