கரூர் மாவட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு
கரூர்,---கரூர் மாவட்டத்தில், வாய்க்கால், ஆறுகளை துார்வாரும் பணியை, கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பாதுகாப்பு கோட்டம் மூலம், 15 பணிகள், 120.47 கி.மீ., தொலைவுக்கு, 2.32 கோடியிலும்; அரியாறு வடிநிலக்கோட்டம் மூலம், 4 பணிகள், 14.50 கி.மீ., தொலைவுக்கு, 53.50 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடையும். கடந்து ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தவிர்க்க, வடிகால்கள் துார்வாரப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அப்போது, குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி, தாசில்தார்கள் விஜயா, காவிரியாற்று பாதுகாப்பு கோட்ட உதவி பொறியாளர்கள் ஸ்ரீதர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!