கனிமம் கடத்தினால் நடவடிக்கை: கலெக்டர்
கரூர்,--கனிமங்களை கடத்திச் சென்றால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:சாதாரண கற்கள், மண், கிராவல், களிமண், சரளை மண், மணல், கிரானைட், சுண்ணாம்புக்கல் மற்றும் குவாட்ஸ் ரூ பெல்ஸ்பர் போன்ற கனிமங்களை, அரசு அனுமதியின்றி வெட்டி எடுப்பது; அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச்செல்வது மற்றும் ஒரேநடை சீட்டை பலமுறை பயன்படுத்துவது; குத்தகை உரிமம் முடிவுற்ற பின்னரும், தொடர்ந்து குவாரி செயல்படுவது ஆகியவை குற்றமாகும்.எனவே, அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்துச்செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கும் வகையில், வாகனங்கள், கருவிகள் மற்றும் அதில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!