சிலவரி செய்திகள்; கரூர்
புகழூரில் பிளாஸ்டிக் தடை ஆலோசனை கூட்டம்கரூர்,-புகழூர் நகராட்சி அலுவலகத்தில், தலைவர் குணசேகரன் தலைமையில், பிளாஸ்டிக் தடை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், வரும் ஜூன், 10 முதல் புகழூர் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என, வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், ஆணையாளர் கனிராஜ், துாய்மை அலுவலர் ரவீந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாகனம், தரைக்கடைகளுக்கு பணம் வசூல் செய்ய தடைகுளித்தலை, - அய்யர்மலை கோவில் திருவிழாக்காலங்களில், வாகன நிறுத்தம், தரைக்கடைகளுக்கு பணம் வசூல் செய்யக் கூடாது என, யூனியன் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் பகுதிகளில் பஞ்., நிர்வாகம் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில், பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில், பஞ்.,க்கு சொந்தமான இடங்களில் அய்யர்மலை கோவில் திருவிழாக்காலங்களில் வாகனங்கள் நிறுத்தம், தரைக்கடைகளுக்கு பணம் வசூல் செய்யக்கூடாது என, யூனியன் ஏ.பி.டி.ஓ., ராஜேந்திரன் சார்பில், உள்ளாட்சித்துறை சட்டப்படி கோவில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!