குண்டும், குழியுமான சாலை
கரூர்,---கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமத்திலிருந்து, தான்தோன்றிமலைக்கு செல்ல பல்வேறு வழித்தடங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை என்பதால், கற்கள் பெயர்ந்து மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி வாகனங்கள், டூவீலர்கள் செல்லும் போதும், மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். தெரு விளக்கும் சரியாக எரிவது கிடையாது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மழை பெய்யும் போது, ரோட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!