dinamalar telegram
Advertisement

கொள்முதல் செய்யப்பட்ட நெல்வெளி மாவட்டங்களுக்கு பயணம்

Share

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நெல் சாகுபடி அதிக அளவில் உள்ளது. மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்வ் வாயிலாக, 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளன.


இங்கு, விவசாயிகள் விற்பனை செய்யும் நெல், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், அண்டவாக்கம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி தானிய கிடங்கில் சேமிக்கப்படுகிறது.மாவட்டம் முழுதும் வாங்கும் நெல் மூட்டைகள், தானிய கிடங்கிற்கு லாரிகள் வாயிலாக எடுத்து வரப்படுகின்றன.இங்கிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்படும்
நெல் மூட்டைகள், 'கூட்ஸ்' ரயில் வாயிலாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு, 9ம் தேதியிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.மேற்கண்ட மாவட்டங்களுக்கு, ரயில் வாயிலாக, நேற்று நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை, 1 லட்சம் கிலோ நெல் அனுப்பப்பட்டுள்ளதாக, வாணிபக் கழக அதிகாரிகள்தெரிவித்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement