dinamalar telegram
Advertisement

லாரி மோதி பெண் பலி

Share
எருமப்பட்டி-திருச்சி அருகே உள்ள பகளவாடி நல்லெண்ணப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 48. சலவை தொழிலாளியான இவரது மனைவி லதா, 41. இவர்களுக்கு திருமணம் ஆகி, 5 ஆண்டுகள் ஆகிறது.இவர்கள், எருமப்பட்டி அருகே உள்ள போடிநாய்க்கன்பட்டியில் உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, நேற்று முன்தினம் அதிகாலை, 6 மணிக்கு ஊருக்கு செல்ல, அலங்காநத்தம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது பின்னால் வந்த லாரி, லதா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லதா, நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement