கழிவு நீரில் மிதக்கும் மணவாள நகர்
மணவாள நகர் : மணவாள நகர் பகுதியில், சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட நகர்கள் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்காததால் கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் வழிந்தோடுகிறது.குறிப்பாக கருணாநிதி தெருவில், சில தினங்களாக பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், சாலையில் வழிந்தோடும் கழிவு நீரை அகற்றவும், கால்வாய் அமைக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!