பேருந்து நிலையத்தில் சாலை சேதம்; வாகன ஓட்டிகள், பயணியர் சிரமம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, திருப்பதி, வேலுார் என, பல்வேறு இடங்களுக்கு நுாற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நகர பேருந்துகளும், சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், பேருந்து நிலையத்தில் சாலை சேதமடைந்து, குட்டைபோல மழை நீர் தேங்கியுள்ளது.சேதமடைந்த சலையை சீரமைப்பதற்கு பதிலாக, அந்த இடத்தில் சாலை தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பு வைக்கப்பட்ட இடத்தில், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!