காட்டில் வாலிபர் தற்கொலை?
பள்ளிபாளையம்,-திருவாரூரைச் சேர்ந்தவர் காளிதாஸ், 27. இவர் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று, மோடமங்கலம் பகுதியில் ஆளில்லாத காட்டுப்பகுதியில், சால்வையில் துாக்குமாட்டி இறந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.இதுகுறித்து நேற்று இரவு தகவலறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடம் சென்று, காளிதாஸ் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்கு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா என்று வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!