சக்திவேல் முருகன் கோவில் கும்பாபிேஷக விழா
புவனகிரி : புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார், எம்.ஜி.ஆர் நகர் சக்தி வேல்முருகன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த 12ம் தேதி மாலை 5.00 மணியில் இருந்து மாலை 6.30 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாலை 6.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் முதல் கால யாக சாலை பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் கும்பாபிேஷகத்தையொட்டி, காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், கடம் புறப்பாடு, மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!